நடிப்பு அரக்கர்கள் இணைந்த மிரட்டலான விக்ரம் பட பர்ஸ்ட் லுக்..!!

நடிகர் கமல்ஹசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் . ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் முடித்துவிட்டு படத்தை தீபாவளி அன்று வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில், நடிகர் கமலுடன் பஹத் பாசில், மற்றும் விஜய் சேதுபதி உள்ளனர். இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகியுள்ளது. மிரட்டலான தோற்றத்துடன் மூன்று பேர் இருக்கும் விக்ரம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களுக்கு மத்தியில், நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

unknown node
நடிப்பு அரக்கர்கள் இணைந்த மிரட்டலான விக்ரம் பட பர்ஸ்ட் லுக்..!!