மிரட்டும் சண்டைக்காட்சிகள்.. அதிர வைக்கும் "குருதி ஆட்டம்" டிரைலர்.!

நடிகர் அதர்வா நடிப்பில் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "குருதி ஆட்டம்". இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர்

நடிகர் அதர்வா நடிப்பில் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

unknown node

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க,  படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டீசர் முதல் பாடல் என படத்திலிருந்து வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

unknown node

எப்போது தான் இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், படம் வரும் ஆகஸ்ட் 5-  ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்திருந்தார்கள். இதனையடுத்து, படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

unknown node

அதன்படி, தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரில், மிரட்டலான லுக்கில் அதர்வா இருக்கிறார். அதில் வரும் சண்டைக்காட்சிகளும், யுவனின் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்ததுள்ளது.

unknown node