நியூசிலாந்தில் மிரட்டும் மாஸ்டர் முன்பதிவு – வசூல் நிலவரம் தெரியுமா?

Bookings for the master film in New Zealand have so far grossed more than $ 55,000, setting a record, directed by logesh.

நியூசிலாந்து நாட்டில் மாஸ்டர் படத்தின் முன்பதிவு இதுவரை 55 ஆயிரம் டாலருக்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டு, மிகப் பெரும் சாதனையை படைத்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் மாஸ்டர். இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இந்த படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் படத்திற்கான முன்பதிவுகள், டிக்கெட் வாங்குவது என ரசிகர்கள் கடந்த ஒரு வாரமாகவே மிக ஆர்வமாக இதனை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், முதல் காட்சியிலேயே படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் கொரோனாவுக்கு கூட பயமின்றி கூட்டத்தோடு கூட்டமாக நின்று ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். நியூசிலாந்து நாட்டில் டிக்கெட் முன்பதிவு வசூல் நிலவரம் குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இதுவரை நியூசிலாந்து நாட்டில் மாஸ்டர் படத்திற்கான முன்பதிவு வசூலாக 55,771 டாலர்கள் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நியூசிலாந்தில் அதிக முன்பதிவு வசூல் செய்த முதல் திரைப்படமும் மாஸ்டர்தான் என்ற சாதனையையும் படைத்துள்ளது.