இணையத்தை கலக்கும் மாஸ்டர் படக்குழுவினரின் பொங்கல் கொண்டாட்ட வீடியோ உள்ளே!

The video of the celebration of Pongal last year with the master film crew has now been posted on the social networking site.

மாஸ்டர் பட குழுவினர் இணைந்து கடந்த ஆண்டு பொங்கல் கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் விஜய் மற்றும் அவருக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாக சில எதிர்மறை கருத்துக்கள் வந்தாலும், படத்தின் வசூல் மிக சிறப்பாகவே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து மாஸ்டர் படக்குழுவினர் சார்பில் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் கடந்த ஆண்டு மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இணைந்து இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வேஷ்டி சட்டையுடன் விஜயும் கலந்து கொண்டுள்ளார். இந்த வருடப் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node