அடர்த்தியான தாடி தோற்றத்தில் நடிக்கும் தளபதி விஜய்..!

thalapathy Vijay acting with a thick beard

தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் அடர்த்தியான தாடி தோற்றத்தில் நடிக்கிறார்.

நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்திற்கான பூஜை வருகின்ற 15 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாகவும், படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ரஷ்யாவில் தொடங்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் அடர்த்தியான தாடி தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த செய்தி தற்போது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அடர்த்தியான தாடி தோற்றத்தில் நடிக்கும் தளபதி விஜய்..!