இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 2”. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கு அதிக வரவேற்புகள் கிடைத்துள்ளது என்றே கூறவேண்டும்.
unknown nodeபலத்த எதிர் பரப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டது.தமிழகத்தில் மட்டும் இந்த படம் 400 திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கிறது.
unknown nodeஇதுவரை மொத்தமாக உலகம் முழுவதும் இந்தப்படம் 900 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் 1000 கோடி வசூல் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் இந்த படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
unknown nodeஅதன்படி, இந்த படம் வெளியான 12 நாட்களில் 75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeஇந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்க, யாஷ் உடன் படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.