40 நாட்களில் சென்னையில் மட்டும் "மாஸ்டர்" இத்தனை கோடி வசூலா..?

It has been reported that the master movie starring Vijay has collected 11.63 crores in 40 days in Chennai alone.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் 40 நாட்களில் சென்னையில் மட்டும் 11.63 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். ஆண்ட்ரியா, கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். வெளியான நாட்களில் இருந்து தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. நல்ல வசூல் சாதனை மற்றும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படம் 40 நாட்களில் சென்னையில் மட்டும் 11.63 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் உலகளவில் மாஸ்டர் 200 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி 50 % பார்வையாளர்களுக்கு மட்டுமே திரையங்குகளில் வெளியான மாஸ்டர் இத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதால் விஜயை வசூல் சர்க்கரவர்தி என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறிவருகின்றார்கள்.