ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு.?

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில்  தொடர்ந்து பல முக்கியமான திரைப்படங்களை வாங்கி

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில்  தொடர்ந்து பல முக்கியமான திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அண்ணாத்த, பீஸ்ட், டான், விக்ரம் போன்ற டாப் நடிகர்களின் படத்தை வாங்கி வெளியிட்டது.

இதை தவிர்த்து, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை வாங்கியுள்ளது. விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 400 கோடி மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் அடுத்ததாக வெளியீடும் படம் அல்லது அடுத்த எந்த படத்தை தயாரிக்கவுள்ளது என்பது குறித்த முக்கிய அறிவிப்பு இன்று இரவு 8.1மணிக்கு அறிவிக்கப்படும் என ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம்  ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. என்ன அப்டேட் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.