பிரசாந்த் ஸ்டுடியோவிற்குள் செல்ல இளையராஜாவுக்கு அனுமதி – உயர்நீதிமன்றம்

Chennai High Court has allowed Ilayaraja to meditate for a day at Prasanth Studio and take away his belongings.

இளையராஜாவுக்கு பிரசாந்த் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்யவும், உடமைகளை எடுத்து செல்லவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிரசாந்த்  ஸ்டூடியோவுக்கு சென்று தனது சொந்தமான பொருட்களை எடுத்து வர அனுமதி அளிக்க வேண்டும் என இளைஞரான தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம், இளையராஜாவை ஒரு நாள் ஸ்டூடியோவுக்குள் பொருட்களை எடுப்பதற்கு அனுமதிப்பதில் என்ன பிரச்சனை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இந்த கேள்விக்கு ஸ்டுடியோ நிர்வாகம் இளையராஜாவை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

மேலும், இளையராஜாவும் அவரும் உதவியாளர்கள், காவல்துறையினர் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆணையர் ஆகியோரை ஸ்டுடியோவிற்குள் அனுமதிக்கலாமா?என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த ஸ்டுடியோ நிர்வாகம், தங்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை இளையராஜா அவர்கள் வாபஸ் பெறுவதாக தெரிவித்தால், அவரை அனுமதிக்கலாம் என பிரசாந்த் ஸ்டுடியோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, பிரசாத் ஸ்டூடியோவில் எந்த ஒரு உரிமையும் கோர மாட்டேன் என்றும், பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும் இளையராஜா மனு அளித்துள்ளார். இதனையடுத்து, பிரசாந்த் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்யவும், உடமைகளை எடுத்து செல்லவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும், பிரசாந்த் ஸ்டுடியோவுக்குள் செல்லும் இளையராஜாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.