சென்னை :நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது ஒரு பக்கம் இருப்பது போல தன்னுடைய சிவகார்த்திகேயன் புரோடக்சன் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். கடைசியாக அவர் கொட்டுக்காளி படத்தினை தனது நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருந்தார். அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களை தயாரிக்கும் பேச்சுவார்த்தைகளும் போய்க்கொண்டு இருக்கிறது.
இதற்கிடையில், ஒரு சிலர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது என்பது போல கூறி ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த சிவகார்த்திகேயன் அப்படி செய்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்து நிறுவனத்தில் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் படங்களுக்கு தனியாக காஸ்டிங் ஏஜென்ட்கள் நியமிக்கப்படவில்லை. அப்படி சொல்லி யாராவது மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது சமூக வலைதள பதிவுகளை பதிவிட்டால் கூட அது உண்மையானது இல்லை என அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” எனவும் அறிக்கையில் திட்டவட்டமாக கூறி சிவகார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் பெயரை பயன்படுத்தி அவருடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்து அதன் மூலம் பணமோசடியில் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதால் அவர் இப்படியான ஒரு அறிக்கையை வெளியீட்டு இருக்கிறார்.
unknown node