நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். பிறகு சில ஆண்டுகளிலே தனிப்பட்ட சில காரணங்களால் நாங்கள் பிரிகிறோம் என்று சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்தனர்.
unknown nodeஇவர்கள் இருவரும் எந்தக் காரணத்திற்காகப் பிரிந்தார்கள் என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. சமந்தாவும், நாக சைதன்யாவும் இது தொடர்பாக எதுவும் பேசக்கூடவில்லை.
இதையும் படியுங்களேன்-AK61-படத்தின் தலைப்பு இதுதானா.?என்னப்பா டைட்டில் இது..!?
unknown nodeஇதனால் இவர்கள் இருவரும் எந்த ஒரு நிகழ்வுக்குச் சென்றாலும் கூட, எதற்காக நீங்கள் பிரிந்தீர்கள் அதற்கான காரணத்தை கூறுங்கள் என்று அது தொடர்பான கேள்விகளைதான் பலரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
unknown nodeஅந்த வகையில், தற்போது ஆமீர் கான் நடித்துள்ள “லால் சிங் தத்தா” படத்தில் நாக சைதன்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாக சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் புரொமோஷன் வேலைகளில் நாக சைதன்யா படக்குழுவிடன் ஈடுபட்டு வருகிறார்.
unknown nodeஅப்போது பேட்டி ஒன்றில் நாக சைதன்யாவிடம் சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்..? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு பதிலளித்த நாக சைதன்யா சமந்தாவிற்கு ஹாய் சொல்லி கட்டிப்பிடித்து விடுவேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
unknown nodeமேலும் பேசிய நாக சைதன்யா ” என்னுடைய டாட்டூவைப் போல் எனது சில ரசிகர்கள் பலர் போட்டிருப்பதைப் நான் பார்த்திருக்கிறேன். எனது திருமண நாளைதான் நான் டாட்டூவாகப் போட்டிருக்கிறேன். இதனால் யாரும் அந்த டாட்டூவை போடவேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார்.