அதுக்காக ‘லிப் லாக்’ பண்ணமாட்டேன்! அது இருந்தால் ஓகே..ரகுல் ப்ரீத் சிங் பேச்சு!

Rakul Preet Singh

ரகுல் ப்ரீத் சிங் : சினிமாவில் இருக்கும் நடிகைகள் பலரும் கதைகளுக்கு எந்த மாதிரி காட்சிகள் தேவையோ அந்த காட்சிகளில் தைரியமாக நடிக்க ஆர்வம் காட்டுவது உண்டு. மேலும், சிலர் அந்த மாதிரி கதைகள் வந்தது என்றால் கூட அந்த காட்சிகளில் நடிக்க தயாராகவும் இருப்பார்கள். அப்படி தான், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் கூட தான் முத்தக்காட்சியில் நடிக்க ரெடி என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது கூறியிருக்கிறார்.

இது குறித்து பேசிய நடிகை ரகுல் ப்ரீத் சிங் ” ஒரு ரொமாண்டிக்கான கதை வருகிறது என்றால்அந்த கதைக்கு லிப் லாக் காட்சி தேவைப்படுகிறது என்றால் நான் நிச்சியமாக நடிப்பேன். ஏனென்றால், அந்த கதை நன்றாக முழுவதுமாக வருவதற்கு அந்த மாதிரி காட்சிகள் இருந்தால் தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால், சும்மா ஒரு போஸ்டர் இருக்கிறது.

அந்த போஸ்டர் ரொமாண்டிக்கான போஸ்டர் என்பதால் அந்த போஸ்டருக்காக லிப் லாக் காட்சியில் நடிக்கமாட்டேன். உண்மையாக அந்த கதைக்கு தேவையாக இருந்தால் மட்டும் தான் லிப் லாக் காட்சியில் நடிப்பேன். இதற்கு முன்னதாக நான் நடித்த படங்களில் கூட லிப் லாக் காட்சியில் நடித்து இருக்கிறேன். அந்த படங்களில் எல்லாம் அந்த காட்சி தேவையானதாக இருக்கும். எனவே, இனிமேலும் கதைக்கு தேவைப்பட்டால் கண்டிப்பாக நடிப்பேன்” எனவும் ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் தைரியமாக அந்த மாதிரி ஒரு காட்சியில்  நடிக்க தயாராக இருப்பதாக ரகுல் ப்ரீத் சிங் கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி சினிமா மீது அவர் வைத்து இருக்கும் ஆதரவை காட்டியுள்ளது. மேலும், இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்