பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்து நடிகர் கமல் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமாகிய கமல்ஹாசன் அவர்கள் நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்றுள்ள கதக் பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்து, தேசிய விருது பெற்றவர் தான் பண்டிட் பிர்ஜு மஹராஜ்.
83 வயதுடைய இவர் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார். ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும், விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம். இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’ என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
unknown node