இனிமேல் நடிக்க மாட்டேன்….! நான் வேற வேலைக்கு போறேன்….! சாக்லேட் பாயின் அதிரடி செயல்….!!!

Default Image

துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்தவர் வினய். இவர் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் முதல் முதலில் இவர் ஹீரோவாக நடித்த படம் உன்னாலே உன்னாலே படம். இந்த படத்தில் இவர் சாக்லேட் பாயாக அறிமுமாகியுள்ளார்.

இந்நிலையில், இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், அரண்மனை, துப்பறிவாளன் என அவர் நடித்துள்ள சில படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்துள்ளது. இந்த படங்களுக்கு பின்பு  ஹீரோக்கான இடம் கிடைக்கவில்லை.

இதனையடுத்து, வில்லனாக மாறிய இவர், வெங்கடேஷ் இயக்கியுள்ள நேத்ரா படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளீயீடு சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இயக்குனர் வெங்கடேஷ் தனது அலைபேசி மூலம் வினய்யை அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், அவரின் மேனேஜர் இனிமேல் அவர் சினிமாவில் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு அமெரிக்காவில் சாப்ட்வேர் தொழிலில் ஈடுபட சென்று விட்டார் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியான அந்த இயக்குனர் வேறு வழியில்லாமல் மற்றவர்களை வைத்து விழா நடத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்