"துளசி இல்லாத தீர்த்தத்தை பார்த்து தான் குடிப்பேன்"... வணக்கம் டா மாப்ள படத்தின் டிரைலர்..!!

The trailer for the movie Hello Da Maple has just been released

வணக்கம் டா மாப்ள படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் வணக்கம் டா மாப்ள என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக பிகில் பட நடிகையான அம்ருதா ஐயர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் டேனியல் , பிக்பாஸ் ரேஷ்மா பசுபதி , ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்,

இந்த படத்திற்கான ஃ பர்ஸ்ட் சிங்கிள் பாடல் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

unknown node