வாணி போஜன் :சின்னத்திரையில் சீரியல்களில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை வாணிபோஜன். இவர் இப்போது பல படங்களில் நடித்துக்கொண்டு இன்னும் சில படங்களில் நடிக்க கதைகளையும் கேட்டு வருகிறார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் தற்போது வாணி போஜன் ஆர்யன் , கேசினோ, பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வாணிபோஜன் தான் நடிக்க மறுத்த படங்கள் பற்றி பேசினார். அதிலும் குறிப்பாக, பேச்சுலர் படத்தில் நடிக்க மறுத்த காரணம் பற்றி பேசியுள்ளார். இந்த பேட்டிக்கு முன்னதாகவே, வாணி போஜன் ஒரு பேட்டியில் பேச்சுலர் படத்தில் முத்த காட்சிகள் இருந்த காரணத்தால் நடிக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து இப்போது கொடுத்த பேட்டி ஒன்றில் இது பற்றி வாணிபோஜன் பேசுகையில் படத்தின் கதை பிடிக்கவில்லை என்பதால் தான் படத்தில் நடிக்க மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பேச்சுலர் படத்தின் கதையை முதலில் என்னிடம் இயக்குனர் சொன்னார். முதலில் கதை கூறியபோது எனக்கு கதை சுத்தமாக பிடிக்கவில்லை.
unknown nodevani bhojan about bachelor file image]
பிடிக்கவில்லை என்றால் கதை நன்றாக இல்லை என்று பிடிக்கவில்லை என சொல்லவில்லை எனக்கு ரொம்ப பயமாக இருந்தது. இந்த படத்தில் நாம் நடித்தால் தப்பா மாறிடும்னு. ஏனென்றால், அப்போது இயக்குனர் கதையை சொல்லும்போது ஹீரோ வேற எனவே நடிக்க எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருந்தது. படம் வெளியான பிறகு படம் பார்த்தேன். நன்றாக இருந்தது ஜிவி, திவ்யா நன்றாக நடித்திருந்தார்கள்.
படம் வெளியான பிறகு இயக்குனர் என்னை ஒரு முறை சந்தித்து நீங்களே இந்த் படத்தில் நடித்திருக்கலாம் மேடம் என்று கூறினார். பின் நான் அவரிடம் மீண்டும் ஒரு கதையை எடுத்துக்கொண்டு வாருங்கள் நாம் படம் செய்யலாம் என்று கூறினேன்” எனவும் நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து இருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திவ்யா பாரதி நடித்திருந்தார். படம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
