இரண்டு நாளுக்கு அப்புறமா தான் அந்த விஷயத்துக்கு ஓகே சொன்னேன்..! மனம் திறந்த புதுப்பொண்ணு மஞ்சிமா..!

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே பல சினிமா பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த மாதம் இறுதியில் அதாவது நவம்பர் 28-ஆம் தேதி

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே பல சினிமா பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த மாதம் இறுதியில் அதாவது நவம்பர் 28-ஆம் தேதி நடிகர் கெளதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

unknown node

GauthamKarthik And ManjimaMohan [Image Source: Twitter ]

‘தேவராட்டம்’ படத்தில் ஒன்றாக பணியாற்றியதன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களின் சம்மதத்துடன் சென்னையில் உள்ள ரெஸ்ட்ரண்டில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்கு ஒரு சில பிரபலங்கள் மட்டுமே வருகை தந்தனர்.

இதையும் படியுங்களேன்-கருப்பு ஆடையில் கண்ணை கவரும் புகைப்படங்களை வெளியிட்ட ஜான்வி கபூர்.!

unknown node

GauthamKarthik And ManjimaMohan [Image Source: Twitter ]

இந்த நிலையில், திருமணத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் தம்பதி தங்களுக்குள் எப்படி காதல் எப்படி உருவானது என்பது குறித்து முதன் முறையாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளனர். இது குறித்து பேசிய அவர் “என்னிடம் கெளதம் கார்த்தி தான் முதலில் காதலை சொன்னார். சரியாக 2019- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கடைசியில் அவர் என்னிடம் காதலை சொன்னார்.

unknown node

GauthamKarthik And ManjimaMohan [Image Source: Twitter ]

எனக்கு ஒரே யோசனையாக இருந்தது. நான் காதலுக்கு உடனே எல்லாம் சம்மதம் சொல்லவில்லை, 2 நாட்கள் டைம் எடுத்து, அதன்பிறகு தான் அந்த விஷயத்துக்கு ஒகே சொன்னேன். கௌதம் கார்த்தி எனக்கு கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும். ஏனென்றால், பல இடங்களில் ஒரு அம்மாவாக இருந்து என்னை அன்பாக பார்த்திருக்கிறார்” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் புதுப்பொண்ணு மஞ்சிமா மோகன்.