நடிகை ராஷி கண்ணா தற்போது கார்த்திக்கு ஜோடியாக சர்தார் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
unknown nodeRaashiKhanna Cute Look [Image Source: Twitter]
இந்த நிலையில் சர்தார் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஊடகத்திற்கு பேட்டிகொடுத்த ராஷி கண்ணாவிடம் உங்களுக்கு எந்த மாதிரி படங்களில் நடிக்க பிடிக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ராசிக் கன்னாவும் சூப்பரான ஒரு பதிலை கொடுத்துள்ளார். அது என்னவென்றால், அவருக்கு பேய் படங்களில் நடிக்க மிகவும் பிடிக்குமாம்.
unknown nodeRaashiKhanna Cute Look [Image Source: Twitter]
இது குறித்து பேசிய ராஷி கண்ணா ” எனக்கு பேய் படங்களில் நடிக்க மிகவும் பிடிக்கும் அந்த படங்களில் நடிக்கும்போது ஒரு த்ரில் உணர்வு இருக்கும். அதுனால் அந்த மாதிரி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் உடனே நடிப்பேன். இப்போது எனது சினிமா பயணம் நன்றாக உள்ளது.
இதையும் படியுங்களேன்-கேப்டன் விஜயகாந்த் எனக்கு அம்மா மாதிரி.! மேடையில் நெகிழ்ந்து போன எம்.எஸ்.பாஸ்கர்.!
unknown nodeCindrella Dream Dress RaashiiKhanna [Image Source: Twitter]
நான் இதுவரை நடித்த படங்கள் சில படங்கள் தோல்வி அடைந்த சந்தர்ப்பங்கள் நிறைய உள்ளது. நான் நிராகரித்த படங்கள் வெற்றி அடைந்தாலும் வருத்தப்பட மாட்டேன். நினைத்ததை எல்லாம் சாதிக்க இன்னும் 20 ஆண்டுகள் நான் சினிமாவில் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.