என்னால் முடிந்த வரை உதவ முயற்சிக்கிறேன்...! தாமதங்கள் இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்...! – சோனு சூட்

I try to do the best I can. If there are any delays, please forgive me if I missed anyone.

என்னால் முடிந்தவரை சிறந்ததை செய்ய முயற்சி செய்கிறேன். ஏதேனும் தாமதங்கள் இருந்தால், யாரையாவது தவற விட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் இந்த காலகட்டத்தில், மக்களுக்கு பல பிரபலங்கள் தங்களது உதவி கரத்தை நீட்டி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சோனு சூட் பிரபல திரையுலக நடிகர் ஆவார். இவர் பலருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். இவரது உதவும் மனப்பான்மையை பலரும் பாராட்டி வருகின்ற நிலையில், கொரோனா காலகட்டத்திலும், மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார்.

அந்த வகையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், அவரது வாட்சப்பில் வரும், அறிவிப்புகளை வீடியோ எடுத்து அதனை வெளியிட்டுள்ளார். அதில், பலரும், தாங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த வீடியோவை வெளியிட்டு, ‘என்னால் முடிந்தவரை சிறந்ததை செய்ய முயற்சி செய்கிறேன். ஏதேனும் தாமதங்கள் இருந்தால், யாரையாவது தவற விட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node