விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான புகழ் தற்போது பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். “மிஸ்டர் ஜூ கீப்பர் (Mr. Zoo Keeper)”எனும் திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
unknown nodeபுகழ் இப்படி பிரபலமாவதிற்கு முப்பு தனது சொந்த ஊரிலிருந்து பெரிய ஆள் ஆக வேண்டும் என்கிற கனவோடு போராடிக் கொண்டிருந்த சமயத்தில் அவருக்குப் பக்க பலமாக இருந்தவர் வடிவேல் பாலாஜி தான். இதனால் பல பேட்டிகளில் புகழ் தனது தந்தைக்கு பிறகு தன்னை நன்றாக பார்த்து கொண்டது வடிவேலு பாலாஜி என்று புகழ் கூறுவது உண்டு.
unknown nodeவடிவேலு பாலாஜி கடந்த 2020-ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் கூட பலரது மனதில் இருக்கிறார் என்றே கூறலாம். இந்த நிலையில், வடிவேலு பாலாஜி குறித்து உருக்கமான பதிவு ஒன்றை புகழ் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன்-ஓடிடிக்கு சென்ற பிரமாண்ட “பிரம்மாஸ்திரா”.! எந்த நிறுவனம்.? எத்தனை கோடி தெரியுமா.?
unknown nodeஅதில் “நீ எங்களுடன் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும் நீ இல்லை என்று நினைக்க முடியவில்லை. எப்பவுமே எங்களுடன் நீ இருப்பது போலவே இருக்கிறது மாமா. என் வாழ்க்கைக்கு வழிகாட்டிய நீ, முக்கிய தருணங்களில் இல்லாமல் போய்விட்டாயே… இதை எழுதும் போதே என் கண்கள் கலங்குகிறது, மிஸ் யூ மாமா” என உருக்கமாக பதிவிட்டுள்ளார் புகழ்.