லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்திற்கான வேளைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
unknown nodeஅவர் அடுத்ததாக எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் விஜய்யை வைத்து படம் இயங்குவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதையும் படியுங்களேன்-ரிலீஸ் ஆவதற்கு முன்பே 100 கோடி வசூல் செய்த லிகர்.! புதிய சாதனை படைத்த விஜய் தேவரகொண்டா…
unknown nodeஇந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிகர் மன்சூர் அலி கானுக்கு பெரிய கேரக்ட்டர் ஒன்று எழுதி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய லோகேஷ் கனகராஜ் ” மன்சூர் அலி கான் எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ.
unknown nodeஎன்னுடைய அடுத்த படத்துல மன்சூர் அலி கானுக்கு ஒரு பெரிய கேரக்டர் எழுதியிருக்கேன். இன்னும் இதனை அவர்கிட்ட சொல்லவில்லை. விரைவில் கூறுவேன்” என்று கூறியுள்ளார். ஒரு காலத்தில் ஹீரோ வில்லன் எனும் கலக்கி வந்த மன் சூர் அலிகான் மீண்டும் சினிமாவில் நடிக்கவருவதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.