எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.! சர்ச், கோவில், மசூதி எல்லாம் ஒன்றுதான்.! விஜயின் அசத்தலான பதில்.!

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு,

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

unknown node

பொதுவாக விஜய் நடிக்கும் படங்களுக்கு இசை வெளியிட்டு விழா நடைபெறும். அந்த நிகழ்ச்சியின்போது விஜய் ரசிகர்களுக்கு குட்டி கதை மற்றும் தனக்கு தோன்றும் அரசியல் கருத்துக்களை தைரியமாக பேசிவிடுவார். அவர் பேசும் கருத்துக்கள் சில சமயம் தலைப்பு செய்தியாக மாறிவிடும்.

unknown node

இந்தமுறை இசை வெளியீட்டு விழா வைக்காததால் விஜய்யின் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் இருந்தார்கள். அவர்களை உற்சாகம் படுத்தும் வகையிலும், பீஸ்ட் பட ப்ரோமோஷனுக்காகவும் விஜய் சன் டிவியில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார்.

unknown node

கிட்டத்தட்ட சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்றார். நேற்று இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நேர்காணல் நிகழ்ச்சியை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தொகுத்து வழங்கினார்.

unknown node

நிகழ்ச்சியில், நெக்லசன், விஜயிடம், நீங்கள் வெளிநாட்டு ஷூட்டிங்கின் போது, சர்ச் போவதை வாடிக்கையாக வைத்திருந்தீர்கள். உண்மையில் கடவுள் நம்பிக்கை உள்ளவரா நீங்கள் என்றவாறு கேட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விஜய், ‘ ஆம் எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.

unknown node

வழக்கமாக தேவாலயம் செலவேன். பிள்ளையார்பட்டி கோவிலுக்கும் செல்வேன், மசூதிக்கும் சென்றுள்ளேன். தேவாலயம் போகும் போகும் போது என்ன தோன்றுமோ அதே போல தான் மற்ற கோவில், மசூதிகளுக்கு செல்லும் போதும் தோன்றும். எம்மதமும் சம்மதம். ‘ என்பது போல தனது தெளிவான பதிலை விஜய் அளித்துள்ளார்.