பணத்துக்காக நான் நடிக்க வரவில்லை – கங்கனா ரனாவத்..!

Actress Kangana Ranaut has said that she is not for money or fame

தான் பணத்துக்காகவோ புகழுக்காகவோ இல்லை என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தலைவி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகரை கங்கனா ரனாவத் அளித்த பேட்டியில் கூறியதாவது, எனது பெற்றோரின் ஆண்குழந்தை நான் பிறந்த போது இறந்து  போனதால் நான் அவர்களுக்கு பிடிக்காத குழந்தையாகவே வளர்ந்தேன். என் மீது அவர்கள் வெறுப்பு காட்டி வளர்த்தார்கள். ஆனால் இப்போது என்னை சிறந்த நடிகை என்று பாராட்டுகிறார்கள்.

நான் நடிப்பதே பணத்துக்காகவோ புகழுக்காகவோ இல்லை. குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் என்னால் தான் நடிக்க வைக்க முடியும் என்று தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நம்புகிறார்கள் அதனால்தான் நானும் நடிக்கிறேன். இது எனக்கு பெருமையாக உள்ளது. குழந்தையாக இருந்தபோது நான் விற்கப்படும் நிலையில் இருந்தாலும் இப்போது உலகம் போற்றும் நாடியாக இருப்பது மகிழ்ச்சி” என்றும் கூறியுள்ளார்.