கடந்த 2017-ஆம் ஆண்டு மாதவன் – விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் வெளியான அதிரடி கேங்ஸ்டார் திரைப்படம் விக்ரம் வேதா. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
unknown nodeதமிழில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியிலும் ரிமேக் ஆகியுள்ளது. இந்த ஹிந்தி ரீமேக்கில் வேதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஹ்ரிதிக் ரோஷனும், விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கானும் நடித்துள்ளனர். திகா ஆப்தே, ரோஹித் சரஃப், யோகிதா பிஹானி, ஷரிப் ஹஷ்மி மற்றும் சத்யதீப் மிஸ்ரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
unknown nodeஇந்த ஹிந்தி ரீமேக் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் நாளை வெளியாகிவுள்ளதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவீரமாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஇதனையடுத்து, படத்தின் ப்ரமோஷனில் படம் குறித்து ஹ்ரிதிக் ரோஷன் அளித்த பேட்டி ஒன்றில் ‘விக்ரம் வேதா’ படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி எந்த அளவிற்கு அற்புதமாக நடித்திருந்தார் என்பது எனக்குத் தெரியும்.
unknown nodeஅவரைப்போல நடிப்பது குறித்து என்னால் கனவில் நினைக்க முடியாது. ஆனாலும், என்னால் முடிந்ததை இந்த படத்தில் செய்துள்ளேன், நான் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார் ஹ்ரிதிக் ரோஷன்.