அவரை போல் என்னால் நடிக்க இயலாது! இருப்பினும் முடிந்த அளவுக்கு முயற்சி செய்வேன் : கவுதம் கார்த்திக்

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "தேவராட்டம்". இத்திரைப்படத்தில் மஞ்சுமா மேனன் மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “தேவராட்டம்”. இத்திரைப்படத்தில் மஞ்சுமா மேனன் மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் கிராமிய சூழலில் உருவாக்கப்பட்டுள்ள படம்.

இந்நிலையில், இந்த படத்தின் ட்ரைலர்  நெல்லையில் உள்ள திரையரங்கு ஒன்றில் மாலைக்காட்சியாக வெளியிடப்பட்டது. இதனையடுத்து, இந்த ட்ரைலரை மக்களோடு இணைந்து பார்ப்பதற்காக, கவுதம் கார்த்திக், மஞ்சுமா மோகன், இயக்குனர் முத்தையா ஆகியோர் தியேட்டருக்கு சென்றுள்ளனர்.

ட்ரைலரை பார்த்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கவுதம் கார்த்திக், செல்லப்பிள்ளை என்ற படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதுபோல பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எனது தந்தை மிகப்பெரிய நடிகர். அவரைப் போல் என்னால் நடிக்க முடியாது. முடிந்த அளவுக்கு அவரைபோல் நடிக்க முயற்சி செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அவரை போல் என்னால் நடிக்க இயலாது! இருப்பினும் முடிந்த அளவுக்கு முயற்சி செய்வேன் : கவுதம் கார்த்திக்