சிங்கிளாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் காக்காமுட்டை படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த படங்களை

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் காக்காமுட்டை படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த படங்களை தொடர்ந்து, வடசென்னை, தர்மதுரை, செக்க சிவந்த வானம் என பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான கனா படத்தில் இவர் நடித்ததன் மூலம் இவருக்கு மிகப்பெரிய பெயரை கிடைத்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காதலில் விழுந்து விட்டதாகவும், விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து, ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில், மறுப்பு தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” நான் காதலிப்பதாக செய்திகள் பரவி வருகிறது. அவர் யார் என்று என்னிடம் கூறுங்கள். நானும் அவரை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். தயவு செய்து வதந்தி பரப்புவதை நிறுத்தி விடுங்கள்.

அப்படி ஏதாவது நடந்தால் நானே உங்களிடம் சொல்லி விடுகிறேன். சிங்கிளாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

unknown node