நான் சூர்யாவின் தீவிர ரசிகை – பிரபல நடிகை ஓபன் டாக்..!

Bollywood actress Isha Deol has said that I am an ardent fan of actor Surya.

பாலிவுட் நடிகை ஈஷா தியோல் தான் நான் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகரின் பட்டியலில் நடிகர் சூர்யாவும் ஒருவர். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா வாடிவாசல், அருவா, சூர்யா 40 என பல திரைப்படங்களை கையில் வைத்துள்ளார். இதில் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவை பல நடிகர்கள் நடிகைகள் புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகை ஈஷா தியோல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் ” நான் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை. அவர் நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் மிகவும் அருமையாக இருக்கும். அவர் நடித்த அனைத்து படங்களையும் நான் பார்த்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

நான் சூர்யாவின் தீவிர ரசிகை – பிரபல நடிகை ஓபன் டாக்..!