சென்னை :வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியது. சர்ச்சைகளை கடந்து வெளியான இந்த படத்தை பார்த்துவிட்டு மக்கள் பலரும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
மக்கள் தெரிவித்து வரும் விமர்சனங்களை வைத்து பார்க்கையில் படம் ஒரு அளவுக்கு சுமாரான வரவேற்பை தான் பெற்றுக்கொண்டு வருகிறது. இந்த நிலையில், படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்ப்போம்.
படத்தை பார்த்துவிட்டு ஒருவர் ” டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்” (DD Next Level) திரைப்படம், சந்தானத்தின் தில்லுக்கு துட்டு உரிமையின் நான்காவது பாகமாக, காமெடி மற்றும் ஹாரர் கலந்த ஒரு முயற்சி. ஒரு பட விமர்சகராக சந்தானம்,ஒரு பேய்ப் படத்திற்குள் சிக்கிக் கொள்ளும் கதைக்களம் புதுமையாக இருக்கிறது. செல்வராகவன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரின் நடிப்பு சுவாரஸ்யம் சேர்க்கிறது. ஆனால், காமெடி எல்லா இடங்களிலும் எடுபடவில்லை, திரைக்கதை இழுவையாகவும், ஒரே மாதிரியாகவும் உள்ளது” என கூறியுள்ளார்.
unknown nodeபடத்தை பார்த்த மற்றொருவர் ” ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற தனது முடிவை சந்தானம் மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் இது. ஏனென்றால், டிடி நெக்ஸ்ட் லெவல் படம் மிகவும் சுமாராக இருக்கிறது. ராஜேந்தரைத் தவிர வேறு எதுவும் சரியாக வேலை செய்யவில்லை. முழு ஏமாற்றம். மட்டும் தான் படம் பார்த்து கிடைத்தது” என கூறியுள்ளார்.
unknown nodeபடத்தை பார்த்த மற்றொருவர் “படத்தின் முதல் பாதி இப்போது தான் முடிந்தது மிகவும் நன்றாக இருந்தது. இதுவரை நல்ல செயலாக்கத்துடன், சில இடங்களில் நகைச்சுவை நன்றாக இருந்தது,கௌதம் மேனன் மொட்ட ராஜேந்திரனுடன் ஆங்கிலத்தில் பேசும் காட்சிகள் நன்றாக இருந்தது மிகவும் சிரிக்க வைத்தது” என கூறியுள்ளார்.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node