சென்னை :கங்குவா படம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. சூர்யா மற்றும் படக்குழுவினர் பலரும் வெளிநாடுகளுக்கு சென்று படத்தினை ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். நாளுக்கு நாள் அவர்கள் படத்தை பற்றி பேசி வருவது படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே, படத்தின் எதிர்பார்ப்பு மிகவும் பெரிய அளவில் எழுந்துள்ள நிலையில், படத்தை பார்த்துவிட்டு எழுத்தாளர் மதன் கார்க்கி தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ளது படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை இன்னுமே அதிகரிக்க காரணமாகவும் அமைந்துள்ளது. படத்தை முழுவதுமாக சமீபத்தில் பார்த்துவிட்டு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” கங்குவா படத்தினை டப்பிங் செய்யும் போது ஒவ்வொரு காட்சியையும் நூறு தடவைகளுக்கு மேல் பார்த்து இருக்கிறேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் பார்த்த போது படத்தின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே தான் இருந்தது. இன்று படத்தை முழுவதுமாக பார்த்துவிட்டு மிரண்டுவிட்டேன்.
காட்சிகளின் பிரம்மாண்டம், கலையின் நுணுக்கமான விவரங்கள், கதையின் ஆழம் மற்றும் இசையின் கம்பீரம் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. சூர்யா சாருடைய நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது. இந்த படத்தை எடுத்துள்ளது என்னை பொறுத்தவரை மிகச்சிறந்த கலைத் துண்டுகளில் ஒன்றாகும்.
இப்படியான சிறப்பான படத்தை அருமையாக வடிவமைத்த அற்புதமான அனுபவத்திற்காக இயக்குனர் சிவா சாருக்கும், இந்த கனவுகளின் இழையை நிஜமாக்கியதற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனமான StudioGreen2 க்கும் மனமார்ந்த நன்றி” என கூறியுள்ளார். படம் பற்றி இவர் விமர்சனம் கூறியது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது.
unknown node