திருவனந்தபுரம்:தமிழ் சினிமாவில் கிளாசிக் திரைப்படங்களை வழங்குவதில் வல்லமைபடைத்த இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன், தனது தாய் மொழியான மலையாளத்தில் இதுவரை ஒரு படத்தை கூட இயக்கவில்லை.
ஆனால், மெகா ஸ்டார் மம்முட்டியை வைத்து முதல் முறையாக இயக்கும் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு ‘Dominic and The Ladies’ Purse’ (டொமினிக் மற்றும் தி லேடீஸ் பர்ஸ் ) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரில் மம்முட்டி குளியல் உடையில் இருப்பதும், பெண்ணின் பர்ஸும் பிரேமில் இருப்பதும் இடம்பெற்றுள்ளது. மேலும் போஸ்டரில் இருந்து மம்முட்டி வெளியேறுவது போல் இருக்க, அவரை ஒரு பூனை பின்தொடர்வது போல் தெரிகிறது.
unknown nodeஇப்படத்தில் நயன்தாரா அல்லது சமந்தா நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக இன்னும் காத்திருக்க வேண்டும். கொச்சி மற்றும் மூணாறில் படமாக்கப்பட்ட இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
மம்முட்டி தவிர, படத்தில் கோகுல் சுரேஷ், லீனா, சித்திக், விஜி வெங்கடேஷ், விஜய் பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க, விஷ்ணு தேவ் ஒளிப்பதிவு செய்கிறார். சூரஜ் ஆர் மற்றும் நீரஜ் ஆர் கதை எழுதிய இந்த படத்தை மம்முட்டி கம்பனி தயாரிக்கும் ஆறாவது படமாகும்.
