கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம்!

The Hindi remake of Kola Mavu Kokila, directed by Nelson and well received in the Tamil film industry, has started.

நெல்சன் இயக்கத்தில் உருவாக்கி தமிழ் திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்ற கோல மாவு கோகிலா படத்துக்கான இந்தி ரீமேக் துவங்கியுள்ளது.

இயக்குனர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸடார் நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து மற்ற மொழிகளிலும் இந்த படத்தை ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றாக கன்னட ரீமேக் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த கோலமாவு கோகிலா படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் எல் ராய் அவர்கள் இந்தியில் தயாரித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சித்தார்த் அவர்கள் இயக்குகிறார். நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு இந்தியில் குட்லக் ஜெர்ரி என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.