‘இரும்புத்திரை’ இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் ஹீரோ. இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்து வருகிறார். அர்ஜூன், அபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் யுவன்சங்கர்ராஜா இசையமைத்து வருகிறார். கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
unknown nodeஇப்படத்தின் சூட்டிங் நேற்று நிறைவடைந்தது. இப்படத்திற்கான விளம்பரத்திற்காக தயாரிப்பு நிறுவனம் ‘பிளே ஹீரோ’ எனும் ஆண்ட்ராய்டு கேமை உருவாக்கி நேற்று வெளியிட்டுள்ளது. இந்த கேம் தற்போது ரசிகர்களால் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.