சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ திரைப்படத்தை வெளியிட கூடாது என டி.எஸ்.ஆர் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இப்படத்தை தயாரித்து வரும் 24ஏ.எம் நிறுவனம் கடன் பாக்கி தர வேண்டியதாக புகார் கூறப்பட்டு, தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நடுவர் அமர்வு ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
unknown nodeஆனால் ஹீரோ படத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது 24ஏ எம் பட நிறுவனம். ஆதலால் கே.ஜே.ஆர் நிறுவனம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. மேலும், இலவச விளம்பரத்திற்கு நன்றி. சொன்னபடி டிசம்பர் 20 படம் ரிலீசாகும் என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.