தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் வில்லன் ஹீரோவா என இரண்டு கதாபாத்திரங்களிலும் கலக்கி வந்தவர் மன்சூர் அலிகான். அந்த வகையில், இவரது நடிப்பில் 1995-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அசுரன்” ஆதித்யன் இசையமைத்த “சக்கு சக்கு வத்திக்குச்சி” பாடலில் நெப்போலியன், மன்சூர் அலிகான், ரோஜா உள்ளிட்டோர் நடனமாடியிருப்பர்.
unknown nodeஇந்த பாடல் வெளியான அந்த காலகட்டத்தில் ட்ரென்டிங் ஆகவில்லை என்றாலும், இந்த காலத்தில் நல்ல ட்ரென்டிங் ஆகிவிட்டது என்றே கூறலாம். ஏனென்றால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படத்தில் பாடல் இடம்பெற்றியிருந்தது.
unknown nodeலோகேஷ் கனகராஜைப் பொறுத்தவரை தனது படங்களில், 1980,1990களில் வெளியான பாடல்களை தனது படங்களில் இடம்பெற செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஆசை அதிகம் வெச்சு பாடலை கைதி படத்தில் வைத்திருந்தார். விக்ரம் படத்திலும் சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலை வைத்திருந்தார்.
unknown nodeஇந்த படத்தில் பாடலை கேட்டதும்பாடலை ரசிகர்கள் யூட்யூபில் தேடி தேடி ரசித்தனர். இதனையடுத்து, இந்தப் பாடலுக்கு மன்சூர் அலிகான் நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் மன்சூரின் நடனம் இன்னமும் அப்படியே இருப்பதாக கூறி வைரலாக்கிவருகின்றனர்.
unknown node