ரீ ரிலீஸாகும் மன்மதன்.... அதற்கான டிரைலர் இதோ..!!

The trailer of the movie Manmadhan starring Simbu will be re-released in theaters on the 19th.

சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் திரைப்படம் வருகின்ற 19 ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் ரீ ரிலீசாகவுள்ள நிலையில், அதற்கான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மன்மதன். இந்த படத்தை அவரே இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்திற்கான இரண்டாவது பாகம் உருவாகுமா என்று எதிர்பார்த்து காத்துள்ளார்கள். சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், மன்மதன் படம் ரீ ரிலீசாக உள்ளது.

ஆம்  இந்த திரைப்படம் வருகின்ற 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் மீண்டும் ரீ ரிலீசாக உள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளநிலையில் தற்போது அதற்கான டிரைலர் வெளியாகியுள்ளது.

unknown node