வடிவேலு நடித்த “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படத்தின் ட்ரைலர் வெளியானது.
unknown nodeNaai Sekar Returns – Official Trailer [Image Source: Twitter ]
இதனை தொடர்ந்து படத்தின் மூன்றாவது பாடலான “டீசென்ட் ஆனா ஆளு” என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் இசையில் வடிவேலுவே பாடியுள்ளதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதையும் படியுங்களேன்-தளபதி விஜய் இத்தனை சூப்பர் ஹிட் படங்களை தவறவிட்டிருக்கிறாரா..? செம லிஸ்ட் இதோ..
unknown nodeஅது மட்டும் இன்றி, பாடலில் வடிவேலு பேசும் வசனங்கள், சந்தோஷ் நாராயணனுடன் அவர் ஆடும் நடனம் அவருடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த பாடலும் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
unknown nodeVadivelu [Image Source: Twitter ]
இந்த பாடலை இயக்குனர் சுராஜ் இயக்கியுள்ளார். ஷிவானி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், சஞ்சனா சிங், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.