நம்ம தெறி பேபியா இது..?! அம்மாவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.!

Actress Meena's daughter Nainika's latest photo goes viral on internet.

நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. ரஜினி , கமல், ஆகிய முன்னை நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டு மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

unknown node

இவர்களுக்கு நைனிகா என்ற பெண்குழந்தை உள்ளது. நைனிகா கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் விஜய் மற்றும் சமந்தாவின் மகளாக நடித்திருந்தார். முதல் படத்திலே மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

unknown node

இந்த படத்தை தொடர்ந்து அரவிந்த் சாமி, அமலாபால் நடிப்பில் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் நைனிகா நடித்திருந்தார். அடுத்ததாக அவர் எந்த படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை.

unknown node

இந்நிலையில், தற்போது தனது அம்மா மீனாவுடன் நைனிகா இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட நம்ம தெறி பேபியா இது இப்படி வளந்துட்டாங்களே என கூறிவருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

unknown node