நாளுக்கு நாள் அதிகரிக்கும் சக்ரா வசூல்...! உலகளவில் இத்தனை கோடியா..?

Chakra, starring Vishal, has grossed Rs 17.35 crore worldwide

விஷால் நடிப்பில் வெளியான சக்ரா படம் உலகம் முழுவதும் 17.35 கோடி வசூல் செய்துள்ளது.

இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ரெஜினா, கசாண்ட்ரா, ஷ்ரத்தா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சக்ரா. இந்த படத்தை விஷாலின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் ரோபோ சங்கர், மனோபாலன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படம் 3 மொழிகளில் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் மொத்தமாக உலகம் முழுவதும் தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்று தகவல் தற்போது கிடைத்துள்ளது, ஆம் முழுவது இந்த படம் 17.35 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது விஷாலிற்கு நல்ல வெற்றி படமாக திகழ்கிறது.