சூரரைப்போற்று படத்திற்கான 7 வது நீக்கப்பட்ட காட்சி இதோ...!

2D, the production company of the film, has posted the 7th deleted footage of the film on its Twitter page.

சூரரைப்போற்று படத்திற்கான7 வது நீக்கப்பட்ட காட்சியை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2D நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத் திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் சிறப்பான விமர்சனத்தை பெற்றது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகி நேற்று முன்தினத்துடன் 100 நாட்கள் கடந்துள்ளதால்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2D நிறுவனம் படத்தில் பணியாற்றிய அனைவர்க்கும் நன்றியை தெரிவித்து வருகிறார்கள். அதனை தொடர்ந்து இந்த படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது ஆம், தற்போது படத்திற்கான7 வது நீக்கப்பட்ட காட்சியை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2D நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

unknown node