பிரதமர் மோடி சென்னையில் காரில் செல்லும்போது அஜித் ரசிகர்கள் அவரிடம் ஐயா வலிமை அப்டேட் என்று கேட்கும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது .
தற்போது நடைபெற்று வரும வலிமை படத்தின் முழு படப்பிடிப்பும் இன்று முடிவடைந்துவிடும். ஒரு ஸ்டண்ட் காட்சி மட்டும் படமாக்கப்பட உள்ளதாகவும், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இதுவரை இந்த படத்தின் டைட்டிலை தவிர எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.எனவே தல ரசிகர்கள் முதல்வர் முதற்கொண்டு அனைத்து இடங்களிலும் வலிமை அப்டேட்டை கேட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று பிரதமர் மோடி சென்னை வந்ததுவிட்டு காரில் செல்லும்போது அஜித் ரசிகர்கள் அவரிடம் ஐயா வலிமை அப்டேட் என்று கேட்கும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ
unknown node