இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. வசூல் ரீதியாகவும் படம் 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.
படத்தில் நடிகர் வடிவேலு உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக மாமன்னன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதுவரை வடிவேலு காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், மாமன்னன் படத்தில் எமோஷனலான ஒரு கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார். வடிவேலுவின் வேறுபரிமாணத்தை மாரிசெல்வராஜ் படத்தின் மூலம் காமித்தார் என்றே கூறலாம்.
மீண்டும் பழைய பார்முலாவை கையில் எடுத்த நடிகை அனுஷ்கா! தரமான கம்பேக் லோடிங்…
படத்தில் வடிவேலு நடித்த கதாபாத்திரமும் பேசப்பட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் முதலில் அந்த மாமன்னன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது வடிவேலு இல்லையாம். வடிவேலுவுக்கு முன்பே வேறொரு ஹீரோ தான் நடிக்க இருந்தாராம். அந்த நடிகர் வேறு யாரும் இல்லை ஆரம்ப காலத்தில் இருந்தே காமெடி வேடங்களில் நடித்து கலக்கி வரும் சார்லி தான் .
முதலில் மாமன்னன் படத்தில் நடிக்க அவரிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தததாம். பிறகு சில காரணங்களால் சார்லியால் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். பிறகு படத்தின் கதையை மாரிசெல்வராஜ் வடிவேலுவிடம் கூறி சம்மதம் வாங்கினாராம். இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் வடிவேலு மாமன்னன் கதாபாத்திரத்தில் நடித்து அருமையாக தான் இருந்தது. அதைப்போலவே சார்லியும் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நன்றாக இருக்கும் என கூறி வருகிறார்கள்.
unknown nodevadivelu and Charle [File Image]
