நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. தற்போது, இவர் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் அஜித்தின் பிறந்த நாளான இன்று, அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், “எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.” என பதிவிட்டுள்ளார்.
unknown node