நடிகை ஹன்சிக்காக தற்போது தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் என பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நடிக்கும் புது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சபரி – குரு சரவணன் இயக்கத்தில் ஹன்ஷிகா நடித்து வரும் இந்த திரைப்படத்திற்கு “கார்டியன்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்திற்கு படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைக்கிறார். ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனத்தின் மூலம் பிரபல இயக்குநர் விஜய் சந்தர் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார். படத்தின் போஸ்டரே ஹாரர் – த்ரில்லர் கதையில் படம் எடுக்கப்படுவதை காட்டுகிறது.
இதையும் படியுங்களேன்-அசல் கோலரின் சேட்டைகள்… வெளியான பகீர் வீடியோ.! என்னென்ன பண்றாங்க பாருங்க…
எனவே இந்த மாதிரி ஒரு திகிலான கதையில் ஹன்சிகா நடித்து வருவதால் “கார்டியன்” படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. விரைவில் இந்த திரைப்படத்திற்கான முதல் பாடல் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node