இயக்குனர் சீனு ராமசாமியுடன் இணைந்த ஜிவி பிரகாஷ்.! அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.!

நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கவுள்ளார்.

நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கவுள்ளார்.

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் விரைவில் தியரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இளையராஜா, யுவன் இணைந்து இசையமைத்துள்ள ‘மாமனிதன்’ திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளார். அதிரடி த்ரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைமகன் தயாரிக்கிறார். இதனை ஜிவி பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

unknown node

விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனுஷ் நடித்து வரும் D44, ராகவ லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன், அருண்விஜய் படம், சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல், போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.