அருண் விஜய் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ்.!

Composer GV Prakash will compose the music for the new film directed by Hari and starring actor Arun Vijay.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இது அவருக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார்.அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.இந்த நிலையில் தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகும் அவரது 33-வது படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் ஏற்கனவே ஹரியின் சேவல் படத்திற்கு இசையமைத்ததும் ,12 ஆண்டுகள் கழித்து அருண் விஜய் நடிக்கும் படத்தில் இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அருண் விஜய் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ்.!