மாநாடு படத்திற்க்கு முன்பே மஹா படம் ரிலீஸ்..?

It has been reported that the crew has decided to release the great film starring Simbu and Hansika before the conference.

சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மஹா படத்தை மாநாடு படத்திற்கு முன்பே வெளியீட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடித்துள்ள “ஈஸ்வரன்” திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலும் சிம்பு நடிக்கவுள்ளார்.இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று மஹா .ஜமீல் இயக்கத்தில் மதியழகன் தயாரிப்பில் சிம்புவுடன் ஹன்சிகா நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.தம்பி ராமையா , ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் சிம்பு முதலில் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக இருந்தது.

ஆனால் படத்தின் கதையை மாற்றி சிம்பு இந்த படத்தில் ஹீரோவாக அதாவது பைலட் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது படப்பிடிப்பை முடித்த இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்த நிலையில் மஹா படத்தினை ஜூன் மாதம் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது மேலும் மாநாடு படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாநாடு திரைப்படம் மஹா படத்திற்கு அடுத்துதான்  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.