இசையோடு விளையாடும் இசைஞானியின் பேத்தி..! வைரலாகும் அழகிய வீடியோ..!!

The video of Ilayaraja giving music to his granddaughter Jiah Yuvan is currently going viral on social media.

இளையராஜா தனது பேத்தி ஜியா யுவனிற்கு இசை சொல்லிக்கொடுக்கும் வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா இப்போது துப்பறிவாளன் 2 , விடுதலை போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இப்போது பல இசையமைப்பார்கள் வந்தாலும் அப்போதிலிருந்து இப்போது வரை இளையராஜாவின் பாடல்களை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். அவருடைய மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் இசையில் கலக்கி வருகிறார்.

இந்த நிலையில், யுவன் ஷங்கர் ராஜாவின் மகள் ஜியா யுவனிற்கு இசைஞானி இளையராஜா இசை சொல்லிக்கொடுக்கும் வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் தனது பேத்தியை இளையராஜா எழுந்து நிற்க உதவிவிட்டு ஒரு ட்யூன் ஒன்றை சொல்லிக்கொடுக்கிறார். இந்த வீடியோவை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

unknown node