கைதி 2 எப்போது தயாராகும் – வெளியாகிய மகிழ்ச்சி தகவல்!

When is Prisoner 2 ready, It has been reported that the hit prisoner 2 movie directed by Lokesh Kanagaraj will be made soon.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெற்றி பெற்ற கைதி 2 திரைப்படம் விரைவில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்து வெளியாகி வெற்றி பெற்ற தமிழ் திரைப்படம் தான் கைதி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படத்தில் உள்ள பாடல் திரைப்படத்தின் சில பகுதிகள் என ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் தற்பொழுதும் நீங்கா இடம் பிடித்துள்ள நிலையில், இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் எப்போது தயாராகும் என பலரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் தான் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் நடிகர் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தை இயக்கி முடித்ததும் அடுத்ததாக கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி கார்த்திக் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.