இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 3 -வது வாரம் வெற்றிநடைபோட்டுக்கொண்டு வருகிறது.
இன்று சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகியும் வலிமை படம் 300 திரையரங்கிற்கு மேல் ஓடுகிறது. தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஹிந்தி என மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.
unknown nodeஇந்த இந்நிலையில், தற்போது வலிமை திரைப்படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை தமிழகத்தில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வலிமை திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் 151- கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeகுடும்ப சென்டிமென் கலந்த ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பின்னணி இசை இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.