சூர்யாவின் 41-வது படத்திற்கான கதை இதுதானா.? தீயாக பரவும் புதிய தகவல்.!

சூர்யாவின் 41-வது படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார், நந்தா பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து இருவரும் 18-ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர். இந்த படத்தை 2டி

சூர்யாவின் 41-வது படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார், நந்தா பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து இருவரும் 18-ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர். இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யா & ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர்.

unknown node

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், சூர்யா -பாலா இணையும் இந்த படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், மீனவர்களின் வாழ்வியலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படவுள்ளதாம்.

unknown node

இதற்கு முன்பு பாலா இயக்கத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை, பரதேசி, நான் கடவுள் போன்ற படங்கள் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். நந்தா பிதாமகன் படத்தை தொடர்ந்து சூர்யா -பாலா இணைந்துள்ளதால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.

unknown node

மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளார். தமிழில் இவருக்கு முதல் திரைப்படம் இது. படத்தில் ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியம் பணியாற்றுகிறார்.